எகிப்து முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் விடுதலை

பொலிஸ் தடுப்பு காவலில் இருந்த எகிப்தில் ஹொஸ்னி முபாரக் 24 ஆம் திகதி விடுவிக்கப்பட்டுள்ளார்.

´அராபி வசந்தம்´ எனப் பெயரிடப்பட்ட 2011 ஆம் ஆண்டு மக்கள் எழுச்சியின் பின்னர் ஆட்சி கவிழ்க்கப்பட்ட ஹொஸ்னி முபாரக் கடந்த சில வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர் கய்ரோ ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி அன்வர் சதான் கொலை செய்யப்பட்ட பின்னர் அதிகாரத்திற்கு வந்த முபாரக் 4 வது ஜனாதிபதியாக செயற்பட்டார்.

2011 ஆம் ஆண்டு அமைதியான மக்கள் எழுச்சியின் போது நூற்றுக்கணக்கானவர்களை கொலை செய்ததாக ஹொஸ்னி முபாரக் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!