ரஷ்ய ஜனாதிபதிக்கு எச்சரித்த பிரதமர் மோடி.!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

ரஷ்ய ஜனாதிபதிக்கு எச்சரித்த பிரதமர் மோடி.!

இது போருக்கான காலம் அல்ல என்று ரஷ்ய ஜனாதிபதி புட்டினிடம், இந்தியப் பிரதமர் மோடி நேருக்கு நேராகக் கூறியது உலகம் முழுவதும் ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

அதற்கு சில மணி நேரம் முன்பு இந்தியா ரஷ்யாவுக்கு மேலும் ஒரு எதிர்வினை ஆற்றி உள்ளது. உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி காணொளி வாயிலாக ஐநா. பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்துவதற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.

 

கடந்த ஏழு மாதங்களாக ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நீடிக்கும் நிலையில் இந்தியா அமெரிக்கா-ரஷ்யா இடையே வெடித்த மோதலில் சார்பு எடுக்காமல் நடுநிலைக் கொள்கையில் உறுதியுடன் உள்ளது. ரஷ்யாவை விமர்சிப்பதிலும் இந்தியா மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives