எலிசபெத் மகாராணியின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

எலிசபெத் மகாராணியின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

பிரித்தானிய மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாட்டில் இன்று (19) தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

 

அரசாங்க நிறுவனங்களுக்கும் சிறப்பு விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளதோடு தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

 

எவ்வாறாயினும் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்க விடுமுறை தினம் தடையாக இருக்கமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மறைந்த பிரித்தானிய மகாராணி 2 ஆம் எலிசபெத்தின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு அஞ்சலி செலுத்தினார்.

 

லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது அஞ்சலியை செலுத்தியுள்ளார்.

 

பிரித்தானியாவின் மகாராணி இரண்டாவது எலிசபத் கடந்த 8 ஆம் திகதி தமது 96 வயதில் காலமனார்.

 

70 ஆண்டுகாலமாக பிரித்தானியாவின் மகாராணியாகவிருந்த இரண்டாம் எலிசபத், மருத்துவ கண்காணிப்பில் இருந்த நிலையில் காலமானார்.

 

அவருக்கு ஸ்கொட்லாந்தில் உள்ள பெல்மொரல் மாளிகையில் சிகிச்சையளிக்கப்பட்டிருந்தது.

 

26 வயதில் பிரித்தானியாவின் மகாராணியாக மகுடம் சூடிய இரண்டாம் எலிசபெத், 70 ஆண்டுகள் ஆட்சி செய்தார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives