ஜப்பானின் வடக்கு ஹொக்கைடோ தீவில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற படகு நீரில் மூழ்கியது

Share on facebook
Share on twitter
Share on whatsapp

ஜப்பானின் வடக்கு ஹொக்கைடோ தீவில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற படகு காணாமல் போயுக்கதாகவும் குறித்த படகை தேடும் பணிகளில் ஜப்பானிய கடலோர காவல் படையினர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனோரில் நான்கு பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நால்வரும் மருத்துவ சிகிச்சைககளுக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன

குறித்த படகில் இரண்டு குழந்தைகள் உட்பட இருபத்தாரு பேர் பயணித்துள்ளமை சுட்டிக்காட்டதக்கது.

குறித்த படகு மூன்று மணிநேர சுற்றாப்பயணத்தின் பின்னரே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போயுள்ள படகை மீட்பதற்காக ஜப்பானிய அரசு ஐந்து ரோந்து படகுகளையும் இரண்டு விமானங்களையயும் ஈடுபடுத்திதயுள்ளது.

மேலும் குறித்த மீட்பு பணிக்காக ஜப்பானின் தற்காப்புப் படைகளின் உதவியையும் அதிகாரிகள் கோரியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives

error: Content is protected !!