ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking) 76 வது வயதில் மரணம் அடைந்தார்

உலக புகழ்பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் தனது 76 வது வயதில் மரணம் அடைந்தார். இன்று அதிகாலை (புதன், 14) கேம்பிரிட்ஜ் இல் உள்ள அவரது வீட்டில் அவர் மரணம் அடைந்தார் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

Black Hole மற்றும் சார்பியலுடனான அவரது ஆய்வுகளுக்காக  அவர் உலகெங்கும் அறியப்பட்டதுடன் A Brief History of Time உள்ளிட்ட பல பிரபலமான அறிவியல் புத்தகங்களை எழுதியவர்.

22 வயதில், பேராசிரியர் ஹாகிங் ஒரு அரிய வகை மோட்டார் நியூரோன் நோயால் கண்டறியப்பட்ட பின்னர் சில ஆண்டுகள் மட்டுமே வாழ முடியும் என கண்டறியப்பட்டது. இந்த நோய் அவரை ஒரு சக்கர நாற்காலியில் அமர்த்தியதுடன் voice synthesizer மூலம் மாத்திரமே அவரால் பேசக்கூடிய நிலையையும் உருவாக்கியது.

அவரது பிள்ளைகளான Lucy, Robert and Tim ஆகியோர் கூறுகையில், “அன்புக்குரிய எங்களது அப்பா இன்று இறந்ததை எண்ணி நாம் மிகவும் கவலையடைகிறோம்.  அவர் ஒரு மிகப்பெரும் விஞ்ஞானி, அசாதாரண மனிதரும் கூட. அவரது ஆராய்ச்சிகள் பல வருடங்கள் இவ்வுலகத்தில் நிலைத்திருக்கும். அவர் தைரியம் மற்றும் நிலைத்தன்மையையுடையவர். அவரது திறமை மற்றும் நகைச்சுவை மூலம் உலகம் முழுவதும் மக்களை ஊக்கப்படுத்தினர்.”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!