உலகெங்கும் யுத்தங்களுக்கு மத்தியில் வாழும் 35 கோடி குழந்தைகள்

உலகளவில் போர் நடைபெறும் பகுதிகளில் ஆறுக்கு ஒரு குழந்தை வாழ்ந்து வருவதாக தனியார் அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

போர் சூழலில் வாழுகின்ற குழந்தைகள், இதற்கு முன்னர் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக ஆபத்தில் வாழ்ந்து வருவதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

Save The Children என்ற குழந்தைகள் நல அமைப்பு நடத்தியுள்ள புதிய ஆய்வில் 35 கோடியே 70 லட்சம் குழந்தைகள் போர் மண்டலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளது.

கடந்த 1995ஆம் ஆண்டு 20 கோடி குழந்தைகளே போர் பகுதிகளில் வாழ்ந்து வந்ததாக குறித்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ள நிலையில்,

தற்போது 75 சதவீத வளர்ச்சி ஏற்பட்டிருப்பதை இந்த தரவுகள் காட்டுகின்றன.

இதில் சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் சோமாலியா நாடுகள் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளாக பதிவாகியுள்ளன.

பொதுவாக, மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள குழந்தைகள் பெரும்பாலும் போர் நடைபெறும் இடங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

அங்கு வாழும் குழந்தைகளில் 5-ல் இரண்டு பேர் போர் நடைபெறும் இடத்திலிருந்து 50 கிலோமீற்றர் தொலைவில் அல்லது மரண தாக்குதல் நடைபெறும் பிற இடங்களில் வாழ்கின்றனர்.

5-ல் ஒருவர் போர் நடைபெறும் இடங்களில் வாழ்வதால் ஆபத்தான பகுதிகளில் ஆப்ரிக்கா 2வது இடம் பெற்றுள்ளது.

உலகெங்கிலும் வாழும் பாதி குழந்தைகளில் அதாவது 16 கோடியே 50 ஆயிரம் பேர் போர் உருவாக அதிக ஆபத்துள்ள மண்டலங்களில் வாழ்வதாகவும் தெரிய வந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!