நியூஸிலாந்தில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் நீடிப்பு: பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் அறிவிப்பு!

நியூஸிலாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் தீவிரம் குறையாத நிலையில், அங்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீடிப்பதாக பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் தெரிவித்துள்ளார்.

இதன்படி கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் செப்டம்பர் 21ஆம் திகதிவரை தொடரும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நியூஸிலாந்தில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் அடுத்த ஒரு வாரத்திற்குத் தொடரும். இதனைத் தொடர்ந்து ஒக்லாந்தில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் செப்டம்பர் 21ஆம் திகதிவரை தொடரும்.

கொவிட்-19 தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டம் அடுத்த வாரம் நடைபெறும். நியூஸிலாந்து மக்கள் முகக்கவசம், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்’ என கூறினார்.

நியூஸிலாந்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால், 1,798பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 24பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!