கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 101ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை கோயம்பேடு சந்தையை மையமாக வைத்து கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஊரடங்கு அமுலில் உள்ளதால், பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வராத வண்ணம் பொலிஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசியமின்றி வெளியே சுற்றித்திரியும் பொதுமக்கள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.

இதன் காரணமாக ஒரு சில இடங்களில் பொலிஸ் அதிகாரிகளுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் சென்னை பொலிஸ் அதிகாரிகள் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 101ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!