31 ஆயிரம் மரணங்களைக் கடந்தது பிரிட்டன் !

கடந்த 24 மணித்தியாலத்தில் பிரிட்டனில் +626 இறப்புகள்  ஏற்பட்டுள்ளதாக, கொரோனா வைரஸ் தொற்று அனர்த்தம் குறித்து, புள்ளிவிபரங்களை வெளியிட்டுவரும் உலக இணையம் தெரிவித்துள்ளது. கடந்த வார இறுதியில் இருந்து குறைவை நோக்கி கீழிறங்கிய பிரிட்டனின் மரணங்கள், மீண்டும் 500 களைக் கடந்த எண்ணிக்கையை தக்கவைத்துள்ளது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்கள் 600களைக் கடந்த மரணங்களுடன் தொடர்கிறது.  இதனையடுத்து அமெரிக்காவின் 77,559 என்ற எண்ணிக்கைக்கு அடுத்த நிலையில், பிரிட்டனின் மொத்த மரணங்கள்,  31,241  ஆக உயர்ந்துள்ளன. அத்துடன் புதிதாக அடையாளம் காணப்பட்ட +4,649 தொற்றாளர்களுடன், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 211,364 ஆக  உயர்ந்துள்ளது.

இதேவேளை,  ஸ்பெயினில் 229 இறப்புகளும், இத்தாலியில் 243 இறப்புகளும் பதிவாகி உள்ளன. மறுபுறம் பிறேசிலில்  +412 இறப்புகளும், மெக்ஸிக்கேபாவில் 257 இறப்புகளும்  பதிவாகி உள்ளன. ஆரம்பத்தில் அதிகளவிலான இழப்புகளை தாங்கிய இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தற்போது இறப்புகள் கட்டுப்பாட்டுள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், அந்த நாடுகளில் எதிர்வரும் வாரங்களில் தளர்வுகளையும் மேற்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!