கடந்த 24 மணித்தியாலத்தில், ஐரோப்பாவில் உச்ச இறப்பை, பிரிட்டன் பதிவு

பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 674 பேர் மரணித்துள்ளதாக NHS தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், பிரிட்டனின் மொத்த மரணங்கள் 26,771 ஆக உயர்ந்துள்ளன.

குறிப்பாக ஐரோப்பாவில் கடந்த 24 மணித்தியால இறப்புகளில் பிரிட்டன் உச்சத்தை தொட்டுள்ளது. ஸ்பெயின் +268 இறப்புகளையும், இத்தாலி +285 பிரான்ஸ் +289 இறப்புகளையும் பதிவு செய்துள்ள நிலையில் உலக அளவில் அமெரிக்காவின் 1017 என்ற உச்ச இறப்புக்கு அடுத்த நிலையில் பிரிட்டனின் இறப்புகள் பதிவாகி உள்ளன.

இதேவேளை புதிதாக தொற்றாளர்களாக இனம் காணப்பட்ட +6,032 பேருடன், தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 171,253 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!