இராணுவ செய்மதியை வெற்றிகரமாக விண்வெளிக்கு ஏவியது ஈரான்

ஈரான் தனது முதலாவது இராணுவ செய்மதியை வெற்றிகரமாக விண்வெளிக்கு ஏவியுள்ளது

நூர் (ஒளி) என பெயரிடப்பட்ட இந்த செய்மதியானது பூமியிலிருந்து 425 கிலோமீற்றர் தூரத்தில் வலம்வருவதாக ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது

இதற்குமுன் பல தடவைகள் இராணுவ செய்மதியை விண்வெளிக்கு ஏவும் முயற்சிகள் தோல்வியுற்றிருந்தன.

இந்நிலையில், ஈரானின் மத்திய பாலைவனப் பகுதியில் வைத்து இன்று புதன்கிழமை இந்த இராணுவ செய்மதி ஏவப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் இதன் நோக்கம் தனது பாதுகாப்பு என்று சொல்கின்ற போதிலும் தன் எதிரி நாடுகளான சவூதியையும், இஸ்ரேலையும் கண்காணிப்பதே இதன் நோக்கம் என்கின்றன சில தகவல்கள்.‌

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!