அடையாளம் காணப்படாத பறக்கும் பொருட்கள் ; புதிய சர்ச்சை

வானில் பறந்து திரியும் அடையாளம் காணப்படாத பொருள் ஒன்றின் காணொலி காட்சியினை பென்டகன் இன்று வெளியிட்டுள்ளது.

இம் மூன்று வீடியோக்களும் அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான விமானங்களின் கமெராக்களில் அகப்பட்டவை என பென்டகன் தெரிவித்தது.

முதலாவது காணொலியில் “டிக் டக்” என பெயரிடப்பட்ட சம்பவமாக 2004 ஆம் ஆண்டு பசுபிக் சமுத்திரத்தில் பதிவாகியதுடன் இரண்டாவது காணொலி ப்லோரிடாவின் ஜக்சன்வலி எனும் கரையோரப் பகுதியில் 2015 இல் பதிவாகியுள்ளது.

இந்த இரு காணொலிகளும் ஏலவே 2017 இல் நியூயோர்க் டைம்ஸ் இனால் வெளியிடப்பட்டதுடன் மூன்றாவது காணொலி 2018 இல் ஸ்ரார் அகடமியினால் வெளியிடப்பட்டது குறிப்பிடப்பட்டது.

இருந்தபோதிலும் இக் காணொலியை வெளியிட்டதற்கான பிரதான நோக்கத்தை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் என கூறியுள்ள பாதுகாப்பு அமைச்சு இது மக்களை அச்சுறுத்தவோ குழப்புவதற்கான செயலோ அல்ல என்றும் மக்கள் உண்மையை உத்தியோக பூர்வமாக அறிந்துகொள்ளவே இதை வெளியிட்டதாகவும் கூறியுள்ளது.

Source : Daily Mail

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!