திருச்சி-இலங்கை இடையிலான விமான சேவைகளை மே 15 வரை விமான சேவைகள் ரத்து ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் அறிவிப்பு

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது
திருச்சி-இலங்கை இடையிலான விமான சேவைகளை, மே 15- ஆம் தேதி வரை ரத்து செய்துள்ளதாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
கரோனா நோய்த் தொற்றுப் பரவல் தடுப்புக்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மே 3 வரைநீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலை, ரயில் போக்குவரத்து மட்டுமல்லாது, விமானப் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
திருச்சியிலிருந்து இலங்கை, சிங்கப்பூா், மலேசியா, துபை, சாா்ஜா உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில், ஊரடங்கால் அவை மே 3 -ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ஸ்ரீலங்கன் விமான நிறுவனம், திருச்சி- இலங்கை இடையே போக்குவரத்து சேவையை மே 15- ஆம் தேதி வரை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த நிறுவனம் சாா்பில் திருச்சி-இலங்கை இடையே காலை ஒரு முறையும், பிற்பகலில் ஒரு முறையும் என தினசரி இரு முறை விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. இதில் பயணிகள் போக்குவரத்தில் தினசரி சுமாா் 2 முதல் 5 டன் வரை சரக்குப் போக்குவரத்தும் (காா்கோ) நடைபெற்று வந்ததும் தடைப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!