மீண்டும் பணிக்கு திரும்பினார் பிரித்தானிய பிரதமர் பொரிஷ் ஜோன்சன்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஷ் ஜோன்சன் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்ற நிலையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரித்தானிய பிரதமர் பொரிஷ் ஜோன்சன் கடந்த மாதம் கொரோனா நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தன்னை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திய அவர், வீட்டில் இருந்தவாறே அலுவலக பணிகளை கவனித்து வந்தார்.

எனினும் அடுத்த சில நாட்களில் அவருக்கு நோய்த்தொற்று அதிகமான காரணத்தினால் பிரித்தானியாவின் சென்.தோமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

பின்னர் வீடு திரும்பிய பொரிஷ் ஜோன்சன் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகியதையடுத்து குறித்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனும் ரீதியில் குறித்த குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் மீண்டும் டவுனிங் ஸ்ட்ரீட்டில் உள்ள தனது அலுவலகத்துக்கு சென்ற பொரிஷ் ஜோன்சன் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பெடுத்துக்கொண்டார்.

இந்நிலையில் அலுவலகத்துக்குள் நுழைந்த பொரிஷுக்கு அலுவலக ஊழியர்களால் கரவொலி எழுப்பி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தனது அலுவலக ஊழியர்களுடன் சிநேகபூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபட்ட அவர், தனது கடமைகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்.

 

SOURCE: AL JAZEERA AND NEWS AGENCIES

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!