கர்பிணிப் பெண்ணை சிறையில் தள்ளியது இந்தியா!!

டில்லியின் வடகிழக்கு மாவட்டத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை ஏற்பாடு செய்ததாக கூறி ஜாமியா ஒருங்கிணைப்புக் குழுவின், ஊடக தொடர்பாளரான இருபத்து ஏழு வயதான   கர்பிணிப் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக, டில்லி ஜாமியா பல்கலை., மாணவர்கள், கடந்த ஆண்டு போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் பிப்ரவரி மாதம், சிஏஏ எதிர்ப்பாளர்கள் – சிஏஏ ஆதாரவாளர்களுக்கிடையேயான மோதலாக மாறி, பெரிய கலவரத்துக்கு வழி வகுத்தது. வடகிழக்கு டில்லியில் நான்கு நாட்கள் நீடித்த கலவரத்தில் பொதுச் சொத்துக்கள், தனியார் வணிக நிறுவனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. மற்றும்  இரண்டு உளவு பிரிவு போலீசார் உட்பட 54 பேர் இக்கலவரத்தில் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

வன்முறை சதியில் ஈடுபட்டதாக கடந்த வாரம் ஜாமியா பல்கலை.,யின் ஆய்வுப் பிரிவு மாணவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், வட கிழக்கு டில்லியின், ஜாப்ராபாத் பகுதியில் பெண்களை திரட்டி, சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களை ஏற்பாடு செய்ததாக, ஜாமியா பல்கலை., மாணவி சபூரா சர்க்காரை போலீசார் கைது செய்தனர்.

இருபத்து ஏழு வயதான சபூரா ஒரு கர்பிணியாவர். மேலும் கடந்த ஏப்ரல் 10ம் திகதி கைது செய்யப்பட்டதுடன், தனது முதலாவது நோன்பை இந்திய தலைநகர் புது டில்லியிலுள்ள அதியுயர் பாதுகாப்புடைய சிறைச்சாலையான பீகார் சிறையில் நோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : Al Jazeera

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!