கொரோனா தடுப்பு பற்றிய தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு தி.மு.க. ஒத்துழைப்பு அளிக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மு.க. ஸ்டாலின் கடிதம் 

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது
கொரோனா தடுப்பு பற்றிய தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு தி.மு.க. ஒத்துழைப்பு அளிக்கும் என மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது.  இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.  இதன் ஒரு பகுதியாக கடந்த மார்ச் 24ந்தேதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.  தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்த உத்தரவு வரும் 14ந்தேதியுடன் முடிவடைய உள்ளது.  இந்நிலையில், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிக கவலையை ஏற்படுத்தி உள்ளது.  இதனால் ஊரடங்கை நீட்டிப்பது பற்றி பிரதமர் மோடி அனைத்து மாநில முதல் மந்திரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், தமிழக முதல் அமைச்சர் பழனிசாமிக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா தடுப்பு பற்றிய தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு தி.மு.க. ஒத்துழைப்பு அளிக்கும்.
கொரோனா பாதித்த நோயாளிகள், தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.
இதேபோன்று தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து விரைவில் முடிவு செய்ய வேண்டும்.  கொரோனா நிவாரணமாக குறைந்தபட்சம் ரூ.5000 மற்றும் அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!