இந்திய வரவு-செலவு திட்டத்தில் இலங்கைக்கு 125 கோடி

இந்தியாவின் 2017-18ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் இலங்கைக்கு  125 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் கடைசி வரவுசெலவுத் திட்டத்தை நேற்று இந்திய பாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி  சமர்ப்பித்தார்.

அயல்நாடுகளான இலங்கை இ நேபாளம்இ பூட்டான்இ மாலைதீவுஇ சிஷெல்ஸ்இ மொறிசியஸ் போன்ற நாடுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதை இதில் காணக்கூடியதாக இருந்தது.

இலங்கைக்கான நிதி ஒதுக்கீடுஇ கடந்த ஆண்டு 75 கோடி ரூபாவாக இருந்தது. அது இம்முறை இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன். இதில் காங்கேசன்துறை துறைமுகத்தை இந்தியா புனரமைக்கவுள்ளது.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சுக்கு14இ798 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில்இ வெளிவிவகார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட தொகையை விடவும்இ 135 கோடி ரூபா அதிகமாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!