இந்தியாவில் கொரோனா.. 61 பேர் பலி  உச்சகட்ட பீதியில் மக்கள் !

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது
இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 24 மணி நேரத்தில் மேலும் 328 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் உயிர்கொல்லி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2113 ஆகவும், பலி எண்ணிக்கை 62 ஆகவும் அதிகரித்துள்ளது. கடந்த 4 நாட்களில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது.  தமிழகத்தில் கடந்த மார்ச் 30ந்தேதி வரை 64 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.  இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கூடுதலாக 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, டெல்லி மாநாட்டுக்கு சென்று விட்டு திரும்பியவர்களிடம் நடந்த கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய பரிசோதனையில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் தெரிவித்தது.  இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 124 ஆக உயர்ந்தது.
அருணாசல பிரதேசத்தில் 31 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அருணாசல பிரதேசத்தில் முதலாவது நபராக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர் ஆவார்.
புதுதில்லியின் சாகேத்தில் அமைத்துள்ள சிஆர்பிஎப்-ல் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் தலைமை மருத்துவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. புதுதில்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) உடலியல் துறையில் குடியுரிமை பெற்ற மருத்துவருக்கு கொரோனா நோய் தோற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் டெல்லியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 219 ஆக அதிகரித்துள்ளது.
ஆந்திராவில் மேலும் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஆந்திராவில் கொரோனா வைரசால் 132 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆந்திர சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
வடகிழக்கில் புதிதாக 5 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 22ஆக அதிகரித்துள்ளது.
ஹரியானாவில் கோவிட்-19 பாதிப்பிற்கு முதல் மரணம். அம்பாலாவைச் சேர்ந்த 67 வயது நபர் உயிரிழந்தார்.வதோதராவில் 52 வயதான கொரோனா வைரஸ் பாதித்த நபர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கர்நாடக மாநிலம் பிதாரில் 11 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் தப்லிகி ஜமாஅத் மாநாட்டுடன் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.
அசாமின் கோல்பாரா மாவட்டத்தில் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அம்மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அம்மாநிலத்தில் மொத்த பாதிப்பு 338ஆக அதிகரித்துள்ளது.
இந்தூரில் 12 பேருக்கு புதிதாக வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அம்மாநிலத்தில் வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 98ஆக அதிகரித்துள்ளது.
ராஜஸ்தானில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ராம்ஜஞ்சில் 7, ஜோத்பூர் மற்றும் ஜுன்ஜுனுவில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன்மூலம் அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 129ஆக அதிகரித்துள்ளது.
குஜராத்தில் புதிதாக 8 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அம்மாநிலத்தில் மொத்த பாதிப்பு 82ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, கொரோனா பாதித்தவர்களில் வீட்டு கண்காணிப்பில் 77,330 பேர் உள்ளனர்.  அரசின் முகாம்களில் 81 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும்.
டெல்லி நிஜாமுதீனில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 1,103 பேர் அவர்களாகவே முன்வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.  அவர்களில் 658 பேருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு உள்ளன.  மீதமுள்ளவர்களுக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  அவர்களுக்கு நாளை (ஏப்ரல் 2ந்தேதி) பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 19 மாவட்டங்களை சேர்ந்த 190 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இவர்களில் தமிழகத்தினை சேர்ந்த 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது என்று கூறினார்.
தொடர்ந்து அவர், 1,103 பேர் இருந்த இடங்களை சுற்றியுள்ள பகுதிகளை தனிமைப்படுத்தவும், அந்த பகுதியில் வசிப்போரை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.  கொரோனா பாதிப்பு உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அவர்களாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!