ஈரானில் புதிதாக 135 பேர் உயிரிழப்பு

ஈரானில் கொரோனா வைரஸினால் 135 பேர் புதிதாக உயிரிழந்ததை தொடர்ந்து, நாடு முழுவதும் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 988 ஆக அதிகரித்துள்ளது.

ஈரானில் 16 ஆயிரத்து 169 பேர் இதுவரை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கடந்த 24 மணிநேரத்தில் 135 பேர் உயிரிழந்ததாகவும் புதிதாக ஆயிரத்து 178 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என ஈரான் சுகாதாரத் துறை அமைச்சு அறிவித்துள்ளது.

ஈரானில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களில் 55 விகிதமானவர்கள் 60 வயதைக் கடந்தவர்கள் என்றும் 15 விகிதமானவர்கள் 40 வயதைக் கடந்தவர்கள் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு ஈரானில் தீவிரமாக உள்ளது என்றும் இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு போதிய இடம் இல்லாமல் போகும் என்றும் அதிகாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பின் தீவிரம் அதிகமாக இருப்பதைத் தொடர்ந்து அங்கு வெள்ளிக்கிழமை வழிபாடுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதோடு பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!