அதிர்ச்சி.. இந்தியாவை உலுக்கிய நாள்!

கொரோனா காரணமாக இந்தியாவில் பலியான நபர்களின் உண்மையான எண்ணிக்கை தற்போது வெளியாகி உள்ளது. நேற்று கூடுதலாக 2004 மரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இந்தியாவில் மொத்த எண்ணிக்கை 3,54,161 ஆக உள்ளது. மொத்தம் 1,54,643 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர்.

இந்தியாவில் இதுவரை 1,87,552 பேர் குணமடைந்து உள்ளனர். மொத்தமாக இந்தியாவில் 11,921 பேர் பலியாகி உள்ளனர். நேற்று மட்டும் 2004 பேரின் பலி எண்ணிக்கை மொத்த பலி எண்ணிக்கை கணக்கில் சேர்க்கப்பட்டு உள்ளது. கொரோனோ பாதிப்பை Dexamethasone குணப்படுத்துகிறது- லண்டன் ஆக்ஸ்போர்ட் விஞ்ஞானிகள் எத்தனை மரணம் இந்தியாவில் டெல்லி, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உண்மையான கொரோனா மரணங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

புள்ளி விவரத்தில் நிறைய தவறுகள் உள்ளது என்று கூறப்பட்டது. முக்கியமாக சில கொரோன மரணங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் மொத்தமாக கொரோனா மரணங்கள் அனைத்தும் கணக்கில் எடுக்கப்பட்டு, அது தொடர்பான விவரம் உள்ளது. உண்மை என்ன அதன்படி இந்தியாவில் உண்மையாக கூடுதலாக 2004 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் இருந்து இந்த மரணங்கள் நிகழ்ந்து உள்ளது. இதனால் இந்தியாவின் இறப்பு சதவிகிதம் திடீரென 20% அதிகரித்துள்ளது. அதேபோல் இறப்பு விகிதம் 2.9%ல் இருந்து 3.4% ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10914 கேஸ்கள் இந்தியாவில் பதிவாகி உள்ளது. மகாராஷ்டிரா நிலைமை மகாராஷ்டிராவில்தான் அதிகமாக 1328 மரணங்கள் பதிவாகி உள்ளது. மும்பையில் மட்டும் 862 மரணங்கள் பதிவாகி உள்ளது. மகாராஷ்டிராவின் பலி எண்ணிக்கை 4128ல் இருந்து 5537 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் நிலைமை மிக மோசமாக உள்ளது.

மும்பையில் மட்டும் புதிதாக 917 மரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மொத்தமாக 3167 மரணங்கள் கணக்கில் சேர்க்கப்ட்டுள்ளது. டெல்லி நிலைமை டெல்லியில் இதேபோல் பலி எண்ணிக்கை 1837 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மொத்தம் 437 மரணங்கள் அங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 344 பழைய மரணங்கள், 93 புதிய மரணங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் நேற்று 49 பேர் பலியானார்கள். தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 528 ஆக உள்ளது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!