பூமிக்கு அருகே பயணிக்க இருக்கும் விண்கல்

2018 DV1 என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு பேருந்தின் அளவுடைய விண்கல் ஒன்று நாளை பூமிக்கு அருகே பயணிக்க உள்ளது.

மணிக்கு 11,600 மீற்றர் வேகத்தில் நகரும் அந்த விண்கல் நாளை பூமியிலிருந்து 65,000 மைல் தொலைவில் பயணிக்க உள்ளது. இது பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள தொலைவில் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.

அந்த விண்கல்லின் பரப்பளவு 5.6 முதல் 12 மீற்றர் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து பூமியினருகே பயணிக்கும் 18 ஆவது விண்கல் இது என்பதால், இதைக் குறித்து அஞ்சத் தேவையில்லை என்று வானியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

நாளை Arizonaவிலுள்ள Tenagra Observatoriesஇல் உள்ள ரோபோ தொலைநோக்கி மூலம் இந்த விண்கல்லைக் காணலாம்.

இதற்கிடையில் பூமியை நோக்கி வரும் விண்கற்களை தடுப்பதற்காக ஒரு குளிர் சாதனப் பெட்டியின் அளவுள்ள விண்கலம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் NASA ஈடுபட்டு வருகிறது.

2024 ஆம் ஆண்டு ஆபத்தற்ற ஒரு சிறிய விண் கல்லைத் தடுக்கும் சோதனை நடைபெற உள்ளது. இந்த சோதனை மட்டும் வெற்றி பெற்று விட்டால், இனி விண்கற்களைக் கண்டு எப்போதுமே அஞ்சத் தேவையில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!