வானில் தோன்றிய Supernova

Argentinaவில் விண்வெளியில் Supernova நிகழ்வினை, ஒருவர் தற்செயலாக படம் பிடித்துள்ளார்.

Supernova என்பது விண்வெளியில் நட்சத்திரமானது பெரும் வெளிச்சத்துடன் வெடித்துச் சிதறும் வானியல் நிகழ்வாகும்.

Argentina நாட்டைச் சேர்ந்தவர் Victor Buso, வானியல் ஆய்வுகளில் ஈடுபாடு கொண்ட இவர், கடந்தாண்டு தனது வானியல் தொலைநோக்கியில், கமெரா ஒன்றை பொருத்தி சோதனை செய்துள்ளார்.

இந்த கமெராவானது, பூமியில் இருந்து சுமார் 6 கோடியே 5 லட்சம் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள, N.G.C.613 எனும் விண்மீன் திரளை நோக்கி வைக்கப்பட்டது.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.30 மணியிலிருந்து 3 மணிவரை, இந்த கமெரா படங்களை எடுத்துள்ளது. இந்த படங்கள், 90 நிமிடங்களுக்கு 20 வினாடிகள் இடைவெளியில் எடுக்கப்பட்டவை ஆகும்.

அவற்றில், முதல் 45 நிமிடங்கள் கழித்து பதிவான 40 படங்களில், Supernova எனப்படும் வானியல் நிகழ்வு படிப்படியாக பதிவாகியுள்ளது.

விஞ்ஞானியாக அல்லாத ஒருவர், Supernovaவின் தொடக்க நிமிடங்களை, தனது கமெரா மூலமாக பதிவு செய்திருப்பது அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!