புதிய பேஸ்புக் தோற்றம்: டெஸ்க்டாப்பில் இருண்ட பயன்முறையைப் (Dark Theme) பெறுவது எப்படி?

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

பேஸ்புக் வரலாற்றில், நான்கு பெரிய மறுவடிவமைப்புகள் வந்துள்ளன.

தற்போது,  புதிய பேஸ்புக் என அழைக்கப்படும் FB5, அவை அனைத்திலும் மிகவும் வியத்தகு முறையில் இருக்கலாம் என நம்பப்படுகின்றது. டெஸ்க்டாப் மற்றும் மொபைலில் பேஸ்புக் எவ்வாறு தோற்ற்றமளிக்க வேண்டும் மற்றும் செயல்பட வேண்டும் என்பதற்கான மொத்த மாற்றம் இதுவெனலாம். அத்தோடு இருண்ட பயன்முறையை (DARK THEME) கூட அறிமுகப்படுத்துகிறது. பேஸ்புக்கில் ஒரு பெரிய வடிவமைப்பு மாற்றம் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன, எனவே இந்த மாற்றம் பயனர்களிடையே மிகவும் வரவேற்கப்படலாம்.

புதிய பேஸ்புக் என்றால் என்ன?

F8 2019 மாநாட்டில், பேஸ்புக் நிர்வாகிகள் தி நியூ பேஸ்புக் (The New Facebook) என்ற பாரிய மறுவடிவமைப்பை (redesign) வெளியிடுவதற்கான சமூக வலைப்பின்னல் திட்டங்களை அறிவித்திருந்தனர். மக்கள் தினசரி பேஸ்புக்கைப் பார்வையிட தூண்டும்  இரண்டு பெரிய காரணங்களான குழுக்கள் மற்றும் நிகழ்வுகளுக்கு (Groups and Events) அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பேஸ்புக் இன் இடைமுகம் புதுப்பிக்கப்படுகிறது. பின்னர் புதிய பேஸ்புக்கில் செய்தி ஊட்டம் (News feed) குறைவாக இடம்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டெஸ்க்டாப் வலைத்தளம் மற்றும் மொபைல் செயலி இரண்டும் தானாகவே புதுப்பிப்பைப் பெறும், மேலும் புதிய தசாப்தத்திற்கான இந்த தோற்றத்தினை நவீனமயமாக்கும் அதே வேளையில் பேஸ்புக்கை உலாவுவதும் எளிதாக்கப்படுகிறது. பேஸ்புக் இது ஒரு தூய புதிய வடிவமைப்பு என்று விவரித்தது, மேலும் வெண்ணிற மற்றும் இருண்ட தோற்ற்றங்களில் பயனர்கள் விரும்பியதை தெரிவு செய்து பயன்படுத்த முடியும்.

புதிய பேஸ்புக்கில் புதியவை எவை?

வெண்ணிற வடிவமைப்பு (White design)

தோற்றத்தில், பேஸ்புக்கின் மறுவடிவமைப்பு டெஸ்க்டாப் மற்றும் மொபைல் செயலி அனைத்திலும் காணப்படுகின்றது. பேஸ்புக்கின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் F8 2019 மாநாட்டில் வெண்ணிற வடிவமைப்பைப் பார்வையாளர்களுக்கு காண்பிப்பதைப் படத்தில் காணலாம்:

இருண்ட பயன்முறை (Dark mode)

பிரகாசமான தோற்றத்தில் ஆர்வம் இல்லாதவர்களை மகிழ்விக்கும் வகையில் இந்த Dark mode காணப்படுகின்றது , ஏனெனில் கடந்த ஆண்டில் Dark mode மிகப்பெரிய trend ஆக மாறியுள்ளதால், இந்த புதுப்பிப்பில் டெஸ்க்டாப் பயனர்களுக்கு பேஸ்புக் தனது Dark mode யை வழங்க முடிவு செய்துள்ளது

செய்தி ஊட்டம் மற்றும் குழுக்கள்

பேஸ்புக்கின் மிகப்பெரிய மாற்றம் செய்தி ஊட்டமாகும் (News feed). குழு சமூகங்கள் மற்றும் தனிநபர் தொடர்பாடல்களில் பேஸ்புக் இரட்டிப்பாகி வருகிறது, மேலும் எதிர்காலத்தில் பேஸ்புக்கிலிருந்து எங்கள் உள்ளடக்கத்தை எவ்வாறு பெறுகிறோம் என்பதில் பெரும் இடையூறு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நண்பர்களும் குடும்பத்தினரும் நமது சமூக வாழ்க்கையின் மையமாக இருக்க வேண்டும் என கருதுவதால், பேஸ்புக் குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு குழுக்கள் அதிகமாக வெளிப்படும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.

புதிய பேஸ்புக் எப்போது வரும்?

பேஸ்புக் 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மொபைல் பயனர்களுக்கு புதிய பேஸ்புக்கை வெளியிடத் தொடங்கியது. இதை முயற்சிக்க, நீங்கள் பேஸ்புக் மொபைல் பயன்பாட்டின் சமீபத்திய பதிப்பை இயக்குகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். டெஸ்க்டாப் பயனர்களைப் பொறுத்தவரை, பேஸ்புக் இறுதியாக மார்ச் 2020 இல் அதை முயற்சிக்க அனுமதிக்கத் தொடங்கியது.

டெஸ்க்டாப்பில் இருண்ட பயன்முறையை (Dark mode) எவ்வாறு பெறுவது

பேஸ்புக் இப்போது டெஸ்க்டாப்பில் இருந்து புதிய பேஸ்புக் மற்றும் அதன் இருண்ட பயன்முறையை முயற்சிக்க மக்களை அனுமதிக்கிறது. உங்கள் கணினியில் பேஸ்புக்கில் உள்நுழைந்து, Settings drop-down menuவுக்குச் சென்று, “Switch to New Facebook” என்று கூறும் option யை தேர்ந்தெடுக்கவும். நீங்கள் புதிய தோற்றத்திற்கு கொண்டு வரப்படுவீர்கள், மேலும் முக்கிய மாற்றங்களை விவரிக்கும் அட்டை காண்பிக்கப்படும். பின்னர், நீங்கள் இருண்ட பயன்முறையைத் (dark mode) தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவீர்கள்.

எந்த நேரத்திலும், பழைய பேஸ்புக் மற்றும் அதன் classic white designற்கு மாற Settings drop-down menuவுக்குச் செல்லலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!