அறிமுகமாகிறது சூழலுக்கு உகந்த E10 பெற்றோல் !

பிரித்தானியாவில் உள்ள எரிபொருள் நிலையங்களில் அடுத்த ஆண்டு முதல் சூழலுக்கு உகந்த பெற்றோல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

தற்போது விற்பனையிலுள்ள எரிபொருளைவிடவும் குறைவான கார்பன் மற்றும் அதிக எத்தனோலைக் கொண்டிருக்கும் E10 பெற்றோலைப் பயன்படுத்துவது குறித்து அரசாங்கம் ஆலோசனை நடத்தியுள்ளது.

இந்த நடவடிக்கையினால் போக்குவரத்துக்கள் மூலம் வெளியேறும் கார்பன் டை ஒக்சைடை (CO2) ஆண்டுக்கு 750,000 ரொன் குறைக்கமுடியும் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

எனினும் குறைந்த கார்பன் எரிபொருள் சில பழைய வாகனங்களுக்குப் பொருந்தாது என்று தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானியாவில் தற்போது பாவனையில் உள்ள பெற்றோல் E5 என அழைக்கப்படுகின்றது. அதில் 5% பயோஎத்தனோல் அடங்கியுள்ளது. E10 பெற்றோலில் இந்த சதவீதம் 10% வரை அதிகரிக்கப்பட்டிருக்கும்.

போக்குவரத்து அமைச்சர் கிரான்ற் ஷாப்ஸ் கூறுகையில் அடுத்த15 ஆண்டுகளுக்குள் வீதிகளில் இருந்து கார்பன் உமிழ்வைக் குறைப்பது எமது முக்கியமான பணியாக இருக்கும். ஏனெனில் நாம் அனைவரும் பூஜ்ஜிய உமிழ்வினால் எதிர்காலத்திற்கான நன்மைகளை உணரத் தொடங்கியுள்ளோம் என்று தெரிவித்தார்.

மின்சாரக் கார்களின் பயன்பாட்டுக்கு மாறுவதற்கு முன்னர் சூழலுக்கு உகந்த பெற்றோலைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறோம். இந்தச் சிறிய மாற்றத்தினால் நாடு முழுவதும் சுற்றுச்சூழலின் தாக்கத்தைக் குறைக்கமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!