மகளிர் டி20 உலக கோப்பை யாருக்கு?தென்னாபிரிக்காவுக்கு 157 ஓட்டங்கள் வெற்றி இலக்கு (ICC Women’s world T20 Final – AUS vs SA)

Share on facebook
Share on twitter
Share on whatsapp

மகளிர் டி20 உலக கோப்பை யாருக்கு..?
தென்னாபிரிக்காவுக்கு 157 ஓட்டங்கள் வெற்றி இலக்கு (ICC Women’s world T20 Final – AUS vs SA)

ஃபைனலில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ஆஸ்திரேலியாவிற்கு சாதகமான டாஸ்
மகளிர் டி20 உலக கோப்பை ஃபைனலில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

மகளிர் டி20 உலக கோப்பை தொடரின் ஃபைனல் இன்று நடக்கிறது. அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணீயும், இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணியும் ஃபைனலுக்கு முன்னேறின.

5 முறை சாம்பியன் ஆஸ்திரேலியாவும், முதல் முறையாக ஃபைனலுக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்காவும் கோப்பைக்கான போட்டியில் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஃபைனலில் டாஸ் ஆஸ்திரேலியாவிற்கு சாதகமாகியுள்ளது.

ஆஸ்திரேலிய மகளிர் அணி:

அலைஸா ஹீலி (விக்கெட் கீப்பர்), பெத் மூனி, மெக் லானிங் (கேப்டன்), ஆஷ்லே கார்ட்னெர், கிரேஸ் ஹாரிஸ், எலைஸ் பெர்ரி, டாலியா மெக்ராத், ஜார்ஜியா வேர்ஹாம், ஜெஸ் ஜோனாசென், மேகன் ஸ்கட், டார்ஸி பிரௌன்.

தென்னாப்பிரிக்க மகளிர் அணி:

லாரா வோல்வார்ட், டாஸ்மின் பிரிட்ஸ், மேரிஸன் கேப், க்ளோ ட்ரையான், நாடின் டி க்ளெர்க், சுன் லூஸ் (கேப்டன்), அனெகெ பாஷ், சினாலோ ஜாஃப்டா (விக்கெட் கீப்பர்), ஷப்னிம் இஸ்மாயில், அயபாங்கா காகா, நான்குலுலேகோ லாபா.

முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 156 ஓட்டங்களுக்கு 6விக்கட்டுக்களை இழந்தது. தற்போது தென்னாபிரிக்கா துடுப்பெடுத்தாடுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives