இலங்கை அணிக்கு 295 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

இலங்கை அணிக்கான வெற்றி இலக்கு!

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கைக்கு 295 என்ற வெற்றி இலக்கை ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயித்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 294 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் இப்ராஹிம் சத்ரான் 106 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

ரஹ்மட் சாஹ் 52 ஓட்டங்களையும், ரஹ்மானுல்லா குர்பாஸ் 53 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives