‘இராவண தேசத்தின் சமர்’இல் வெற்றிவாகை சூடியது சேனைகுடியிருப்பு CHENAI VETRI VINAYAGAR அணி!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

‘இராவண தேசத்தின் சமர்’இல் வெற்றிவாகை சூடியது சேனைகுடியிருப்பு CHENAI VETRI VINAYAGAR அணி!

‘இராவண தேசத்தின் சமர்’ எனும் தொனிப்பொருளில் கல்முனை  இராவணா விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் கல்முனை பிராந்தியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து அணிகள் கொண்ட  கிரிக்கெட் சுற்று போட்டி நேற்று (17)  ஆரம்பமானது.

 

இதில்  கல்முனை சார்பாக KALMUNAI REDTITANS, சேனைகுடியிருப்பு சார்பாக  CHENAI VETRI VINAYAGAR,பெரியநீலாவனை சார்பாக  PERIYANEELAVANI SPORTS CLUB,நற்பட்டிமுனை சார்பாக  NATPADDIMUNAI STALLIONS,பாண்டிருப்பு  சார்பாக  PANDIYOOR SHESHAN LEOPARDS அணிகள் கலந்து கொண்டன.

 

இதன்  இறுதிப்போட்டி  இன்று (18) CHENAI VETRI VINAYAGAR  அணி மற்றும் NATPADDIMUNAI STALLIONS அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

 

இதில் CHENAI VETRI VINAYAGAR அணியினர் நாணயசுழற்சியில் வெற்றி பெற்று கலத்தடுப்பை தெரிவு செய்தனர். முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட NATPADDIMUNAI STALLIONS அணியினர்   10 ஓவர்கள் முடிவில் 76 ஓட்டங்களுக்கு  8 விக்கட்டுக்களை இழந்தது .பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய CHENAI VETRI VINAYAGAR. 9 .2ஓவர்களுக்கு  5விக்கெட்டுகளை இழந்து 77ஓட்டங்களை பெற்று  2022கான இராவணதேசத்தின் சமர் மகுடத்தை சேனைகுடியிருப்பு CHENAI VETRI VINAYAGAR அணி சுவீகரித்துக்கொண்டது.

(கி.ஷனுஸ்காந்)

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives