ஆசியா கிண்ணத்தை வென்றதுஇலங்கை!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

ஆசியா கிண்ணத்தை வென்றதுஇலங்கை!

ஆசிய வெற்றிக் கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இலங்கை சம்பியனானது.

இலங்கையின் 171 ஓட்ட இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 147 ஓட்டங்களைப் பெற்றது.

இதனடிப்படையில் இலங்கை அணி 23 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

டுபாய் விளையாட்டரங்கில் இடம்பெற்ற இப் போட்டியில் நாணய சுழற்றியில் வெற்றியீட்டிய பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இலங்கை அணிக்கு வழங்கியது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

ஒரு கட்டத்தில் 58 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து இக்கட்டான நிலையில் இருந்த போது பானுக ராஜபக்ஷவும், வனிந்து ஹசரங்கவும் இணைந்து ஓட்டங்களைக் குவித்து அணிக்கு வலு சேர்த்தனர். பானுக ராஜபக்ஷ ஆட்டமிழக்காது 71 ஓட்டங்களையும், வனிது ஹசரங்க 36 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 28 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் ஹாரிஸ் ரவூப் 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives