முதல் போட்டி அவுஸ்திரேலியா வசமானது!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

நடைபெற்று முடிந்த சிம்பாப்வே அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையான முதலாவது ஒருநாள் போட்டியில் 5விக்கட்டுக்களால் அவுஸ்திரேலியா வெற்றியை தனதாக்கியது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய அவுஸ் பந்துவீச்சை தெரிவு செய்தது.

அதன்படி முதலில் களத்தெடுப்பை எடுத்த சிம்பாப்வே அணி 47.3 ஓவர்களில் 200ஓட்டங்களை பெற்று சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. சிம்பாப்வே அணியில் வெஸ்லி மத்வெரே 72(91) ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றதோடு பின் வரிசை வீரர்கள் பிரகாசிக்க தவறிய நிலையில் அடுத்தடுத்து சிம்பாப்வே அணியின் விக்கட்டுக்கள் சரிந்தது.

அவுஸ்திரேலியா அணி சார்பில் 9 ஓவர்கள் வீசிய கெமரூன் கிரீன் 33 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை வீழ்த்தி முதலாவது சர்வதேச ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அவுஸ்திரேலியாவின் வெற்றியிலக்கு 201 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணியின் துடுப்பாட்ட வீரர்களான டேவிட் வோர்னர் 57(66), ஸ்டீவ் ஸ்மித்48(80) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றியை தன்வசமாக்கிக் கொண்டது. குறிப்பாக க்ளைன் மெக்ஸ்வல் ஐந்தாவது விக்கட் இணைப்பாட்டத்தில் 9 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 3 சிக்ஸர்கள் 3பவுண்டரிகளாக 32 ஓட்டங்களை விலாசினார்.

சிம்பாப்வே சார்பில் ராயன் பார்ல் 3விக்கட்டுக்களை வீழ்த்தினார். இறுதியில் அவுஸ்திரேலியா 33.3 ஓவர்களில் 201 ஓட்டங்களை பெற்று 5விக்கட்டுக்களால் வெற்றியிட்டியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives