தினேஷ் சண்டிமாலுக்கு 2 டி20 போட்டிகளில் விளையாடத் தடை!

வங்கதேச அணிக்கெதிரான போட்டியில் குறிப்பிட்ட நேரத்துக்குள் இலங்கை அணி பந்துவீசி முடிக்காமல், கூடுதல் நேரம் எடுத்துக் கொண்ட காரணத்தால் கேப்டன் தினேஷ் சண்டிமாலுக்கு 2 டி20 போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை, இந்தியா, வங்கதேசம் ஆகிய அணிகள் இடையிலான நிதாஹஸ் கோப்பைக்கான டி20 தொடர் இலங்கையில் நடந்து வருகிறது.

இலங்கை – வங்கதேசம் அணிகள் இடையிலான லீக் போட்டி கொழும்பு பிரேமதாஸா மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில், முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது.

215 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, 2 பந்துகள் மீதமிருந்த நிலையில், வெற்றி இலக்கை எட்டி சாதனை படைத்தது. இலங்கை மண்ணில் டி20 போட்டியில் அதிகபட்ச சேசிங் ஸ்கோர் இதுவாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!