ஐபிஎல் 2022… எந்தெந்த அணி யார் யாரை தக்க வைத்துள்ளது? எத்தனை கோடிகளுக்கு? முழு விபர பட்டியல்

Share on facebook
Share on twitter
Share on whatsapp

அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணி தக்க வைத்துள்ளது, என்ற முழு பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர், அடுத்த ஆண்டு 10 அணிகளுடன் நடைபெறவுள்ளது.

இதனால் முன்பு இருக்கும் அணிகள் நான்கு வீரர்களை மட்டும் தக்க வைத்துக் கொண்டு, மற்ற வீரர்களை ஏலத்தில் விட்டு விட வேண்டும். இதற்கான கடைசி நாள் நேற்றோடு முடிவடைந்துவிட்டதால், அதன் படி தாங்கள் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு அணியும் அறிவித்துள்ளது.

அந்த வீரர்களின் பட்டியலை விலையுடன் பார்ப்போம்.

ராஜஸ்தான் ராயல்ஸ்

சஞ்சு சாம்சன்- 14 கோடி ரூபாய்
ஜோஸ் பட்லர் – 10 கோடி ரூபாய்
யாஷவி ஜெய்ஸ்வால் – 4 கோடி ரூபாய்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஆண்ட்ரூ ரசுல் – 12 கோடி ரூபாய்
வருண் சக்ரவர்த்தி – 8 கோடி ரூபாய்
வெங்கடேஷ் அய்யர் – 8 கோடி ரூபாய்
சுனில் நரைன் – 6 கோடி ரூபாய்

டெல்லி கேப்பிட்டல்ஸ்

ரிஷப் பாண்ட் – 16 கோடி ரூபாய்
அக்ஸர் பட்டேல் – 9 கோடி ரூபாய்
பிரித்வி ஷா – 7.50 கோடி ரூபாய்
ஆன்ரிச் நோர்க்கியா – 6.50 கோடி ரூபாய்

சென்னை சூப்பர் கிங்ஸ்

ரவீந்திர ஜடேஜா- 16 கோடி ரூபாய்
டோனி – 12 கோடி ரூபாய்
மொயின் அலி – 8 கோடி ரூபாய்
ருத்ராஜ் கெய்க்வாட் – 6 கோடி ரூபாய்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

கானே வில்லியம்சன்-14 கோடி ரூபாய்
அப்துல் சமாத் – 4 கோடி ரூபாய்
உம்ரன் மாலிக்- 4 கோடி ரூபாய்

பஞ்சாப் கிங்ஸ்

மயங்க் அகர்வால் – 12 கோடி ரூபாய்
அர்ஷ்திப் சிங் – 4 கோடி ரூபாய்

மும்பை இந்தியன்ஸ்

ரோகித் சர்மா- 16 கோடி ரூபாய்
ஜஸ்ப்ரிட் பும்ரா- 12 கோடி ரூபாய்
சூர்யகுமார் யாதவ்- 8 கோடி ரூபாய்
கிரண் பொல்லார்ட் – 6 கோடி ரூபாய்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

விராட் கோஹ்லி – 16 கோடி ரூபாய்
கிளன் மெக்ஸ்வேல்ஸ் – 11 கோடி ரூபாய்
மொகமது சிராஜ் – 7 கொடி ரூபாய்

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives

error: Content is protected !!