ஜடேஜாவை கிளீன் போல்ட் ஆக்கி பழிதீர்த்து கொண்ட டிம் சவுதீ! வைரலாகும் வீடியோ

Share on facebook
Share on twitter
Share on whatsapp

இந்தியா – நியூசிலாந்து முதல் டெஸ்டில் ஜடேஜாவை போல்ட் ஆக்கி பழி தீர்த்து கொண்டார் டிம் சவுதீ.

கான்பூர் டெஸ்ட் போட்டியில் இன்று ஜடேஜா 50 ரன்களில் இருந்த போது முதல் ஓவரை சவுதீ வீசினார். இதில் 5வது பந்து நேராக ஜடேஜாவின் கால்காப்புக்கு சற்று மேலே தாக்கியது, சவுதீ பெரிய அப்பீல் செய்தார் நடுவர் ஷர்மா அவுட் கொடுக்கவில்லை.

கேன் வில்லியம்சன் உடனே ரிவியூ செய்தார். ரிவியூவில் பந்து மட்டையில் படவில்லை என்று தெளிவாகத் தெரிய ஜடேஜா வாங்கிய இடமும் சரியாக ஸ்டம்புக்கு நேராக இருந்தது.

ரீப்ளேயில் பந்து மிடில் ஸ்டம்பை பதம் பார்த்திருக்கும் என்று தெரிந்தது, ஆனால் ரிவியூவிலும் நாட் அவுட் கொடுக்கப்பட்டதால் டிம் சவுதி, கேன் வில்லியம்சன் மற்றும் ஒட்டுமொத்த நியூசிலாந்து அணியும் ஏமாற்றமடைந்தன. மேலும் இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

ஆனால் சவுதி அயராமல் மீண்டும் பவுலிங் செய்து ஒரு ஓவர் சென்ற பிறகு ஜடேஜாவின் ஸ்டம்ப்களை பெயர்த்து போல்ட் செய்தார். இது தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives

error: Content is protected !!