மேத்யூஸ், நிரோசன் டிக்வெல்க்கு ஓய்வு! முத்தரப்பு டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

இந்தியா, வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் பங்கு பெறும் முத்தரப்பு டி20 தொடர் (Hero Nidahas Trophy 2018) வரும் 6-ஆம் திகதி இலங்கையில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இத்தொடருக்கான 20 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டது.

இதில் மேத்யூஸ் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் காயம் இன்னும் முழுமையாக குணமடையாத காரணத்தினால், தொடரிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதன்படி இறுதியான 15 பேர் கொண்ட இலங்கை அணியை, இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதில் விக்கெட் கீப்பரான நிரோசன் டிக்வெல்லா ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடினாலும், டி20 தொடரில் அவரின் செயல்பாடு திருப்தியாக இல்லாத காரணத்தினால் அவர் முத்தரப்பு தொடருக்கான அணியில் இடம் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முத்தரப்பு தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி

 • Dinesh Chandimal (Captain)
 • Upul Tharanga
 • Danushka Gunathilaka
 • Kusal Mendis
 • Dasun Shanaka
 • Kusal Janith Perera
 • Thisara Perera
 • Jeevan Mendis
 • Suranga Lakmal (Vice Captain)
 • Isuru Udana
 • Akila Dananjaya
 • Amila Aponso
 • Nuwan Pradeep
 • Dushmantha Chameera
 • Dhananjaya De Silva

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!