சங்காவின் இடத்திற்கு வருகிறார் பெண்.. அதுவும் வரலாற்று சாதனையடன் !

233 ஆண்டுகால வரலாற்றில் மெர்லிபோர்ன் கிரிக்கெட் கழகத்தின் (எம்.சி.சி.) முதல் பெண் தலைவராக கிளேர் கானர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானியர் அல்லாத எம்.சி.சி தலைவரான தற்போதைய தலைவர் குமார் சங்கக்கார புதன்கிழமை நடைபெற்ற இணையவழி வருடாந்திர பொதுக் கூட்டத்தின் போது, இங்கிலாந்தின் முன்னாள் மகளிர் அணித்தலைவர் கிளேர் கானரின் பெயரை பரிந்துரைத்தார்.

இப்போது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபையின் மகளிர் கிரிக்கெட்டின் தலைவரான கானர், உறுப்பினரின் ஒப்புதலுக்கு உட்பட்டு, 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் 1ஆம் திகதி தனது புதிய பதவியை ஏற்க உள்ளார்.

இதுகுறித்து 43 வயதான கானர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கிரிக்கெட் விதிமுறைகளை வகுக்கும் எம்.சி.சியின் அடுத்த தலைவராக நியமிக்கப்படுவது எனக்கு மிகவும் பெருமை அளிக்கிறது. கிரிக்கெட் ஏற்கனவே என் வாழ்க்கையை மிகவும் ஆழமாக வளப்படுத்தியுள்ளது. இப்போது அது இந்த அற்புதமான பாக்கியத்தை எனக்குக் கொடுக்கிறது.

நாங்கள் எவ்வளவு தூரம் வந்துள்ளோம் என்பதைப் பார்க்க நாங்கள் அடிக்கடி திரும்பிப் பார்க்க வேண்டும். விளையாட்டு அரங்குக்கு பெண்கள் வரவேற்பைப் பெறாத நேரத்தில், விண்மீன்கள், கிரிக்கெட் ஆர்வமுள்ள ஒன்பது வயது சிறுமியாக நான் லோர்ட்ஸுக்கு எனது முதல் வருகை பதிவுசெய்தேன்’ என கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!