அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட இலங்கை வீரருக்கு தடை !

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ஷெஹான் மதுஷங்க அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ஷெஹான் மதுஷங்க பன்னல பொலிஸாரால் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில் எதிர்வரும் ஜீன் மாதம் 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரை அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இடைநீக்கம் செய்வதாக இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!