கெய்லுக்கு முதலிடம்.. லசித் மாலிங்கவுக்கு இரண்டாமிடம் !

உலகின் முன்னணி கிரிக்கட் இணையத்தளமான ESPN-Cricinfo , ரீ-20 போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடிய வீரர்களைத் தெரிவு செய்யும் கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது.

இந்த இணையத்தள நிறுவனத்தின் பணியாளர்கள் மத்தியில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், மேற்கிந்திய வீரர் கிறிஸ் கெய்ல் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த வீரர், 2005 இல் ரீ-20 போட்டிகளில் விளையாடத் தொடங்கி குறுகிய காலத்தில் சாதனைகளை நிலை நாட்டியுள்ளார். ஆகக்கூடுதலான இனிங்ஸ் ஓட்டங்கள, மொத்த ஓட்ட எண்ணிக்கை, அதிவேக சதம் போன்றவை சாதனைகளுள் சிலவாகும்.

மிகச்சிறந்த ரீ-20 வீரர்களின் பட்டியலில் லசித் மாலிங்க இரண்டாம் இடத்தைப் பெற்றதாக ESPN-Cricinfo அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!