ஆப்கான் கிரிக்கெட்டில் நடந்த அதிர்ச்சி… வீரருக்கு 6 ஆண்டுகள் தடை !

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளரான ஷபிகுல்லா ஷபிக்குக்கு, அனைத்துவகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதற்கு ஆறு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

30 வயதான ஷபிகுல்லா ஷபிக், கடந்த வருடம் நடைபெற்ற பங்காளதேஷ் ப்ரீமியர் லீக் ரி-20 கிரிக்கெட் போட்டியின் போது அவர் சூதாட்ட தரகர்களிடம் பணம் பெற்றுக்கொள்ள முயற்சித்தது விசாரணைகள் மூலம் தெரியவந்ததையடுத்து இந்த தடைக்கு உள்ளாகியுள்ளார்.

இந்த விசாரணையில் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக்கிலும் சூதாட்டத்தில் ஈடுபட்டதுடன், பங்களாதேஷ் ப்ரீமியர் லீக்கில் சக அணி வீரர் ஒருவரை சூதாட்டத்தில் ஈடுபட செய்ய அணுகியுள்ளார் என தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட 6 வருடங்கள் தடை விதித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை உத்தரவிட்டுள்ளது.

இறுதியாக கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பங்களாதேஷ் அணியுடனான ரி-20 போட்டியில் விளையாடி இருந்த ஷபிகுல்லா ஷபிக், இதுவரை ஆப்கானிஸ்தான் அணிக்காக 24 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2 அரைசதங்கள் உட்பட 430 ஓட்டங்களையும், 46 ரி-20 போட்டிகளில் விளையாடி 494 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!