டெஸ்ட் தரவரிசையில் இலங்கைக்கு அடித்த அதிஸ்டம்.. திடீரென உயர்வு !

சர்வதேச கிரிக்கெட் வாரியமானது டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 அணிகளுக்கான புதிய தரவரிசைகளை இன்று (1) வெளியிட்டிருந்தது. இதில் டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் முன்னர், ஆறாம் இடத்தில் காணப்பட்ட இலங்கை அணி 91 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியிருக்கின்றது.

இதில் முதலாவதாக டெஸ்ட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை பார்க்கலாம்.

இந்த பட்டியலில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, எட்டு இடங்கள் முன்னேறி 116 மதிப்பீட்டு புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்திவந்த இந்தியா அணி, 2016ஆம் ஆண்டு பிறகு முதல்முறையாக முதலிடத்தை பறிகொடுத்துள்ளது.

அடுத்து ஒருநாள் அணிகளின் தரவரிசைப் பட்டியலை பார்க்கலாம். இந்த பட்டியலில் உலக சம்பியன் இங்கிலாந்து அணி தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.

ரி-20 அணிகளின் தரவரிசைப் பட்டியலை பொறுத்தவரை. யாரும் எதிர்பாராத அளவு மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. ரி-20 கிரிக்கெட் வரலாற்றில் அவுஸ்ரேலியா அணி, முதல் முறையாக தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

அதேபோல சுமார் இரண்டு ஆண்டுகளாக முதலிடத்தை தக்க வைத்திருந்த பாகிஸ்தான் அணி, நான்காவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை 

நிலைநாடுபுள்ளிகள்
1அவுஸ்திரேலியா116 (+8)
2நியூசிலாந்து115 (+5)
3இந்தியா114 (-2)
4இங்கிலாந்து105 (-)
5இலங்கை91 (-)
6தென்னாபிரிக்கா90 (-8)
7பாகிஸ்தான்86 (+1)
8மேற்கிந்திய தீவுகள்79 (-2)
9பங்களாதேஷ்55 (-5)
10ஜிம்பாப்வே18 (+1)

ஒருநாள் அணிகளுக்கான தரவரிசை

நிலைநாடுகள்புள்ளிகள்
1இங்கிலாந்து127 (+3)
2இந்தியா119 (+1)
3நியூசிலாந்து116 (+1)
4தென்னாபிரிக்கா108 (-6)
5அவுஸ்திரேலியா107 (-2)
6பாகிஸ்தான்102 (+4)
7பங்களாதேஷ்88 (+1)
8இலங்கை85 (+2)
9மேற்கிந்திய தீவுகள்76 (-2)
10ஆப்கானிஸ்தான்55 (-2)

T20 அணிகளுக்கான தரவரிசை

நிலைநாடுகள்புள்ளிகள்
1அவுஸ்திரேலியா278 (+9)
2இங்கிலாந்து268 (+1)
3இந்தியா266 (+2)
4பாகிஸ்தான்260 (-10)
5தென்னாபிரிக்கா258 (-1)
6நியூசிலாந்து242 (-3)
7இலங்கை230 (-2)
8பங்களாதேஷ்229 (+2)
9மேற்கிந்திய தீவுகள்229 (+3)
10ஆப்கானிஸ்தான்228 (-5)

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!