அவுஸ்திரேலிய அணியில் ஆறு பேர் நீக்கம்.. கிரிக்கெட் சபை அதிரடி

ஒவ்வொரு ஆண்டும் புதுபிக்கப்படும் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தை, கிரிக்கெட் அவுஸ்ரேலியா வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கும் கிரிக்கெட் அவுஸ்ரேலியா, மத்திய ஒப்பந்தத்தில் இம்முறை ஆறு வீரர்கள் நீக்கியுள்ளது.

இந்த ஆண்டுக்கான மத்திய ஒப்பந்தத்தில் இருந்து சகலதுறை வீரர் ஷோன் மார்ஷ், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உஸ்மான் கவாஜா, துடுப்பாட்ட வீரர் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், சகலதுறை வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ், வேகப்பந்து பந்துவீச்சாளர் நாதன் குல்டர்-நைல், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மார்கஸ் ஹாரிஸ் ஆகியோரை நீக்கியுள்ளது.

புதுமுக வீரர்களான லபுஸ்சேன், ஜோ பர்ன்ஸ், ஆஷ்டன் அகர், கேன் ரிச்சர்ட்ஸன் ஆகியோருக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டதோடு, மேத்யூ வேடும் ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.

அதேவேளையில் காயத்தில் இருந்து மீண்டுள்ள சகலதுறை வீரர் மிட்செல் மார்ஷ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் அவுஸ்ரேலியா ஒப்பந்தத்தில் இடம் பிடித்துள்ள வீரர்களின் விபரம்: ஆஷ்டன் அகர், ஜோ பர்ன்ஸ், அலெக்ஸ் கேரி, பெட் கம்மின்ஸ், ஆரோன் பிஞ்ச், ஜோஷ் ஹசில்வுட், ட்ராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஸ்சேன், நாதன் லியோன், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், டிம் பெய்ன், ஜேம்ஸ் பேட்டின்சன், ஜெய் ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மேத்யூ வேட், டேவிட் வோர்னர், ஆடம் ஸம்பா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

ஆனால், டெஸ்ட் அணித்தலைவரான டிம் பெய்ன், அணித்தலைவராக இல்லாவிட்டால் அவருக்கும் அணியில் இடம் இல்லை என்றே கூறப்படுகின்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!