ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள டேல் ஸ்டெய்னின் பதினொருவர் அணி !

தென் ஆபிரிக்காவின் சிறந்த வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெய்ன் தெரிவு செய்துள்ள பதினொருவர் அணியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் எவரும் உள்வாங்கப்படவில்லை. எனினும் தன்னுடன் கழக மட்டத்தில் விளையாடிவர்கள் சிலரை தெரிவு செய்து ஆச்சரித்தை ஏற்படுத்தியுள்ளார்.

தென் ஆபிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெய்ன், டெஸ்ட்  கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றுருப்பின் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இவர் தன்னுடன் விளையாடிய, எதிர்த்து விளையாடிய வீரர்களிலிருந்து சிறந்த பதினொருவர் அணியை தெரிவு செய்துள்ளார். இந்த பதினொருவர்களில் 9 தென் ஆபிரிக்க வீரர்கள் இடம்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.

இந்த ஒன்பது வீரர்களில் பெரிதும் பிரபல்யம் பெற்றிராது தென் ஆபிரிக்கர்கள் சிலரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். அதாவது, தனது உற்ற நண்பன், கழக மட்ட போட்டிகளில் தன்னுடன் பந்துவீசியவர் , தனது கழக தலைவர் என ஒரு சிலரையும் தனது பதினொருவர் அணியில் ஸ்டெய்ன் இணைத்துள்ளார்.

இந்த பனினொருவரில் இலங்கையின் குமார் சங்கக்கார, அவுஸ்திரேலியாவின் பிரெட் லீ ஆகிய இருவர் மாத்திரமே ஏனைய நாட்டு வீரர்களாவர்.

டேல் ஸ்டெய்ன் தெரிவு செய்துள்ள பதினொருவர் அணி விபரம் வருமாறு :   1. கிரேம் ஸ்மித் 2. குமார் சங்கக்கார 3. டேவ் ஹோக்கன் 4. ஜெக் கலிஸ்  5. ஜொன்டி ரோட்ஸ் 6. குயிண்டன் டி கொக் 7. பிரெட் பார்கியாச்சி 8. பீற்றர் லெம்பர்ட்  9. பிரெட் லீ, 10. போல் ஹெரிஸ், 11. அலன் டொனால்ட் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!