கொரோனா முடியவில்லை என்றால் ஒலிம்பிக் போட்டி ரத்து?

ஜப்பான்: கொரோனா வைரஸ் தொற்றை 2021 க்குள் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படும் என டோக்கியோ ஒலிம்பிக் குழு தலைவர் யோஷிரோ மோரி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஜூலை மாதம் ஜப்பானின் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இருந்தது. இந்நிகழ்விற்காக ஜப்பான் பல ஆயிரம் கோடி செலவிட்டிருந்தது. கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் பரவிய தொடங்கிய மார்ச் மாதத்தில், சர்வதேச விளையாட்டு சங்கங்களும், விளையாட்டு வீரர்களும் கொடுத்த அழுத்தம் காரணமாக ஓராண்டுக்கு போட்டியை தள்ளி வைத்து 2021, ஜூலை 23 என புதிய தேதி குறிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் குழு தலைவர் யோஷிரோ மோரி அளித்துள்ள பேட்டியில், “முன்னதாக போர் காரணங்களால் மட்டுமே ஒலிம்பிக் போட்டிகள் ரத்தாகியுள்ளன. தற்போது கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் போர் புரிந்துக்கொண்டிருக்கிறோம். 2021-க்குள் நோய் தொற்று கட்டுக்குள் வரவில்லை என்றால், அதன் பிறகு 2022-க்கு போட்டி தள்ளிவைக்கப்படாது. அப்படி நடந்தால் ரத்து செய்ய வேண்டியிருக்கும்.” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!