என் வீட்டு வாசலில் ஒருவர் மயங்கி கிடந்தார் !

தன் வீட்டு வாசலில் மயங்கி கிடந்த நபருக்கு உணவளித்ததாக கூறியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணி வீரரான முகமது ஷமி. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் இந்தியாவில் மே 3ம் திகதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

வேலைக்காக அண்டை மாநிலங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கான கி.மீகள் சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் அவலநிலை ஏற்பட்டது. சில ஊழியர்கள் பசியால் மயக்கம் அடைந்து உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற ஒரு சூழ்நிலையை சந்தித்ததாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

பீகாரைச் சேர்ந்த ஒருவர் ராஜஸ்தானில் இருந்து நடந்து வந்திருக்கிறார்.  லக்னோவில் இருந்து இன்னும் பீகாருக்கு அவர் செல்ல வேண்டியிருக்கிறது என்பதை நினைத்துப் பாருங்கள். அவருக்கு எப்படி செல்ல வேண்டும் என்பதை குறித்து ஏதும் தெரியவில்லை.

எங்கள் வீட்டிலிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த போது அவர் பசியால் மயங்கி கிடந்ததை பார்த்து அவருக்கு உணவளித்தேன். இதுபோன்று என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றேன், என்னுடைய வீடு நெடுஞ்சாலையில் உள்ளதால் இதுபோன்ற மக்களை பார்க்க முடிகிறது, சொந்த ஊருக்கு செல்ல கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!