கிரிக்கெட் இரசிகர்களுக்கு ஐ.சி.சி யிடமிருந்து மகிழ்ச்சியான செய்தி !!

உலகமே கொரோனா வைரஸ் அச்சத்தில் தனது நாட்டின் அனைத்து எல்லைகளையும் ஆஸ்திரேலியா மூடியுள்ளது. இதனால், வரும் அக்டோபர் மாதம் திட்டமிட்டபடி டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கிடையில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்த எதிர்காலம் குறித்து ஐசிசி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போதுள்ள கொரோனா வைரஸ் பரவல் சூழலில், ஐசிசி டி -20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்துவது குறித்து உள்ளூர் கமிட்டி கூர்மையாக கவனித்து வருகிறது. தொடர்ந்து அந்த குழு சூழ்நிலையை கண்காணித்து வரும். தற்போதைக்கு திட்டமிட்டபடி ஆஸ்திரேலியாவின் 7 இடங்களில் உலகக்கோப்பை தொடர் நடக்கும்” என அதில் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!