கொரோனா வைரஸ்.. சிக்குண்ட இரண்டாவது வீரர்..? யார் தெரியுமா.?

நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீரர் லொக்கி பெர்குசனுக்கு, கொரோனா வைரஸ் தொற்று இல்லை என நியூஸிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்ரேலியா சென்றிருந்த நியூஸிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த லொக்கி பெர்குசன், தொண்டை வலியால் அவதிப்பட்டார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறியான தொண்டை வலி இருப்பதால், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என அஞ்சப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர் சிட்னியில் உள்ள ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டார். 24 மணி நேரம் அவரை கண்காணித்து பரிசோதனைகள் செய்யப்பட்டது.

இந்த பரிசோதனை முடிவில் பெர்குசனுக்கு கொரோனா இல்லை என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளார்.

ஏற்கனவே அவுஸ்ரேலிய வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா இல்லை என்பது தெரிய வந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!