இறுதி போட்டியில் வெற்றி பெற்றது இலங்கை அணி…!!

பங்களாதேஷில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றது.

இந்தப் போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின

நாணயச்சுழற்யில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்படுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 221 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இந்நிலையில், 222 ஓட்டங்கள் எனும்  வெற்றி இலக்கிற்காக களமிறங்கிய பங்களாதேஷ் அணி 41.1 ஓவர்களில்,  சகல விக்கட்களையும் இழந்து 142 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இந்நிலையில் குறித்த தொடரில், இலங்கை அணி 79 ஓட்டங்களினால் வெற்றியை தனதாக்கியது.

இன்று தனது முதலாவது போட்டியில் விளையாடிய இலங்கை அணி வீரர், ஷெஹான் மதுஷங்க யாரும் எதிர்ப்பார்க்க முடியாத நிலையில் ஹெட்ரிக் விக்கட்களை கைப்பற்றி இலங்கை அணியின் வெற்றிக்கு இட்டுச் சென்றார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!