கங்காராம விகாரைக்குச்சென்ற இந்திய பிரதமர் நரேந்திரமோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொழும்பிலுள்ள கங்காராம விகாரைக்குச் சென்று நேற்று (11) இரவு 9.30 மணியளவில் வழிபாட்டில் ஈடுபட்டார்.

அங்கு கங்காராம விகாராதிபதி உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.  அதன்பின்னர் அங்கு இடம்பெற்ற வழிபாட்டு நடவடிக்கைகளில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

இந்திய பிரதமர் , பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து கங்காராம பகுதியில் வெசாக்  தினத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த அலங்கார வெசாக் வலயத்தை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்துவைத்துள்ளார்.

விகாரையில் இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வில் ஈடுபட்டு அங்கு கூடியிருந்த வெவ்வேறு நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த மதத்தலைவர்களையும் அவர் சந்தித்துள்ளார்.

இந்த நிகழ்வில் சபாநாயகர் கருஜயசூரிய , அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, சாகல ரத்னாயக்க. விஜயதாச ராஜபக்ஷ, ரி.எம்.சுவாமிநாதன், தயா கமகே உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!