பொதுஅறிவுக்கு இஸ்லாம் முக்கியத்துவம் கொடுத்துள்ளது: அஷ் – ஷெய்க் எம்.எஸ்.எம். தாஸிம் மௌலவி

 

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

இஸ்லாம் பொதுஅறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இதனை சமூகத்தவர் மத்தியில் பலப்படுத்தும் நோக்கிலே ரமழான் மாதத்தில் இவ்வாறான போட்டிகளை நடாத்துவதற்கு அஷ் – ஷபாப் நிறுவனம் ஆர்வம் காட்டுகிறது என அந்நிறுவனத்தின் பிரதிப்பணிப்பாளர் அஷ் – ஷெய்க் எம்.எஸ்.எம். தாஸிம்மௌலவி கூறினார்.

ஜம்மியத்துஷ் ஷபாப் நிறுவனமும் நவமணிப் பத்திரிகையும் இணைந்து நடத்திய ரமழான் பரிசுமழை விழா அண்மையில் ஜம்மியத்துஷ் – ஷபாப் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற வேளை, அதில் உரையாற்றிய போதே தாஸிம் மௌலவி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது,

ஜம்மியத்துஷ் – ஷபாப், நவமணிப் பத்திரிகை ஆகியன இணைந்து கடந்த ரமழான் காலங்களில் தொடராக ரமழான் போட்டி நிகழ்வுகளை நாங்கள் ஏற்பாடு செய்து வருகின்றோம்.  நூற்றுக்கணக்கானவர்கள் இதில் பங்கு கொண்டு வருகின்றனர். புனித ரமழானை நல்ல முறையில் கழிக்க வேண்டும்.  புனித ரமழானை அல்குர்ஆனோடு தொடர்பு கொண்டு நன்மைகளைப் பெற வேண்டும். நபி (ஸல்) அவர்களுடைய ஸுன்னா வழி முறை ஹதீஸ்களோடு தொடர்பு கொள்ள வேண்டும்.  இஸ்லாமிய பொது அறிவு சம்பந்தமான பல விடயங்களைத் தேட வேண்டும்.

எனவே இஸ்லாம் பொதுஅறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது. இந்த பல நோக்கங்களுக்கு அமையத்தான் ரமழான் மாதத்தில் இப்படியான போட்டி நிகழ்வுகள் நடாத்தப்படுகின்றன. அந்த வகையில் நான்காவது தடவையாகவும் ரமழான் போட்டி நடாத்தப்பட்டு அதில் பலர் பரிசுக்குரியவர்களாக இன்று தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

எதிரே வருகின்ற  புனித ரமழானிலும் போட்டி நடாத்தப்பட்டு கடந்த காலங்களை விட இன்னும் சிறப்பாக நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம். கடந்த ரமழான் காலங்களில் முதற்பரிசாக உம்ரா செல்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. எதிர்வரும் காலங்களில் முதல்பரிசாக ஹஜ் செல்வதற்கான வாய்பை ஏற்படுத்திக் கொடுக்க பரோபகாரிகளின் பங்களிப்போடு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம்.

எனவே எதிர்காலங்களில் இது போன்ற நல்ல பல விடயங்களை  ஜம்மியத்துஷ – ஷபாப் நிறுவனமும் நவமணிப்பத்திரிகையும் இணைந்து நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.  எது எவ்வாறு இருப்பினும் இந்த நாட்டில் முஸ்லிம்களுடைய இருப்பை நாங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!