உலகம் போற்றும் முதல் தழிழ் பேராசிரியர் முத்தழிழ் வித்தகர் ஸ்ரீமத் சுவாமி விபுலாநந்தரின் துறவற தினம்

(துறையூர் தாஸன்)
சுவாட் மற்றும் மனித அபிவிருத்தித் தாபனத்தின் அனுசரணையுடன், உலகம் போற்றும் முதல் தழிழ் பேராசிரியர் முத்தழிழ் வித்தகர் ஸ்ரீமத் சுவாமி விபுலாநந்தரின் துறவற தினம், அவர் பிறந்த மண்ணான காரைதீவில் இன்று(10) இடம் பெற்றது.
சுவாட் மற்றும் மனித அபிவிருத்தித்தாபனத்தின்  காரியாலயங்களில் நந்திக் கொடி ஏற்றும் நிகழ்வுடன் ஊர்வலம் ஆரம்பமாகி விஷ்னு ஆலயம் ஊடாக விபுலானந்தா சதுக்கத்தில் அமையப்பெற்றுள்ள சுவாமியின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து புஸ்பாஞ்சலி மற்றும் மங்கள ஆராத்தி என்பன இடம்பெற்றது.
விபுலானந்தா சதுக்கத்திலிருந்து மீளவும் சுவாமியின் இல்லமான ஞாபகார்த்த மணிமண்டபத்தில் இரண்டாம் கட்ட  துறவறதின  நிகழ்வுகள் மிகவும் கோலாகலமாகவும் இடம் பெற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!