விஞர் சண்முகம் சிவலிங்கத்தின் நினைவு நிழல், பார்ப்போருக்கு நிறைவான அர்த்தவுணர்வை கொடுத்திருந்தது

(துறையூர் தாஸன் )
கவிஞர் சண்முகம் சிவலிங்;கத்தின் ஐந்தாம் ஆண்டு நினைவு தின நினைவு நிழல் கல்முனை
கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை மண்டபத்தில் எழுத்தாளர் உமா வரதராஜன் தலைமையில் இன்று(07) இடம்பெற்றது.
சண்முகம் சிவலிங்கத்தின் வாழ்க்கை வரலாறு மற்றும் இலக்கியப் பயணம் தொடர்பான
குறிப்புகள் இலக்கியார்வலர்களாலும்,இலக்கிய நண்பர்களாலும் அவரிடம் கற்ற நேரடி மாணவர்களாலும், திரையில் குரல் வடிவம் கொடுக்கப்பட்டிருந்தது.
சண்முகம் சிவலிங்கத்தின் வீழ்ச்சி என்ற கவிதை ஆயுதப் போராட்டம் மனிதனை ஒரு மண்புழுவாக வீழ்ச்சியடைய வைத்த வரலாறு உமாவரதராஜனின் குரல் வெளிப்பாட்டிலும்
ர.ஜோயலின் காட்சிக்கூடாகவும் உயிர் வடிவம் பெற்றிருந்தது.
கவிஞர் சோ.பத்மநாதனின் சிறப்புரையினைத் தொடர்ந்து கவிஞர் சண்முகம் சிவலிங்கத்தின் சிதைந்து போன தேசமும் தூர்ந்து போன மனக்குகையும் என்ற கவிதைத் தொகுப்பிலுள்ள போருக்கு போனாய் போ என்ற கவி வடிவத்திற்கு, பேராசிரியர் சி.மௌனகுரு உட்பட அரங்க ஆய்வுகூட கலைஞர்கள் வெகு சிறப்பாக ஒளி,ஒலி இசை,பெருங்காட்சியுடன் அரங்க வடிவம் கொடுத்திருந்தனர்.
நாட்டார் பாடலில் எளிமையான ஆழமான அர்த்தங்களுடன் படைக்கப்பட்ட சண்முகம் சிவலிங்கத்தின் ஆக்காண்டி ஆக்காண்டி கவி வரிக்கு, அரங்க ஆய்வுகூட படைப்பாளர்கள், நிறைவான உணர்வை பார்ப்போருக்கு கொடுத்திருந்தனர்.
ஓய்வு நிலை தமிழ் பேராசிரியை சி.மௌனகுரு,ஓய்வு நிலைப் பேராசிரியர் செ.யோகராஜா,கவிஞர் சோ.பத்மநாதன்,பாலமுனை பாறுக்,கவிஞர் அன்புடீன்,மற்றும் குடும்ப உறவினர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள்,இலக்கிய ஆர்வலர்கள்,கவிஞர்கள்,கலைஞர்கள் இதன்போது கலந்துகொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!