சுயாதீன ஊடகவியலாளர் விருது

(துறையூர் தாஸன் )
மட்டக்களப்பு களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகத்தின் 59 ஆவது ஆண்டு நிறைவையும்
சித்திரப் புத்தாண்டையும் முன்னிட்டு அமைப்புகள் மற்றும் பொது மக்களின் ஆதரவுடன், கலாசார விளையாட்டு விழா களுதாவளை பொது விளையாட்டு மைதானத்தில்
அண்மையில் இடம்பெற்றது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 10 வருட காலமாக சுயாதீன ஊடகவியலாளராக
பணிபுரிந்து வரும் வடிவேல் சக்திவேலின் ஊடக சேவையை பாராட்டி மேற்படி விளையாட்டுக் கழகத்தினால் பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
பாடசாலைக் காலத்திலிருந்து மட்டக்களப்பில் இருந்து வெளிவந்த தினக்கதிர் பத்திரிகைக்கு
ஆக்கங்களை எழுதி வந்ததுடன் பாடசாலைக் காலம் நிறைவடைந்ததும் கொக்கட்டிச்சோலையில்
இருந்து வெளிவந்த ஈழநாதம் பத்திரிகையில் ஒப்புநோக்குனராகவும் பணி புரிந்துள்ளார்.பின்னர் இன்ர நியூஸ் ஊடக அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்பட்ட கிழக்கு ஊடக இல்லத்தில் பணிபுரிந்துள்ளதுடன் தற்போது சுயாதீன ஊடகவியலாளராகவும் செயற்பட்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!